Saturday, November 2, 2013

பல்லி விழுதலின் பலன்

தலையில் – கலகம்,
குடுமி – சுகம்,
கூந்தல் – லாபம்,
முகம் – பந்து தரிசனம்.
சிரசு – கெண்டம்,
நெற்றியில் – பட்டாபிஷேகம்,
வலப்புருவம், இடப்புருவம் – ராஜானுக்கிரகம்,
வலது இடது புருவ மத்தியில் – புதல்வர் நாசம்,
வலக் கபாலம் – சம்பத்து,
இடக் கபாலம் – அன்பு தரிசனம்.
வலக்கண் – சுபம்,
இடக்கண் – கட்டுப்படுதல்,
மூக்கு – வியாதி,
மூக்குநுனி – விசனம்
மேல் உதடு – பொருள்நாசம்,
கீழ் உதடு – தனலாபம்,
மோவாய் கட்டை – ராஜதண்டனை,
வாய் – பயம்
வலது காது – தீர்க்கயுசு,
இடது காது – வியாபாரம்,
கழுத்து – சத்ருநாசம்
வலது புஜம் – ஆரோக்கியம்
இடது புஜம் – ஸ்திரி சுகம்,
வலக்கை – துக்கம்,
இடக்கை – துயரம்,
வலது மணிக்கட்டு – பீடை
இடது மணிக்கட்டு – கீர்த்தி,
வலது கை விரல் – ராஜசன்மானம்,
இடக்கைவிரல் – துரம்,
வலது, இடது கைவிரல்கள் – தனநாசம்
மார்பு – தனலாபம்,
வலது இடது ஸ்தானங்கள் – பாபசம்பவம்,
இருதயம் – சௌக்கியம்
தேகம் – தீர்க்காயுள்,
வலது விலா எலும்பு – வாழ்வு,
இடது விலா எலும்பு – கெண்டம்
வயிறு – தன்யலாபம்
நபி – ரத்தின லாபம்,
உபயபாரிசம் – லாபகரம் அடைதல்
முதுகில் – நாசம்,
ஆண்குறி – தரித்திரம்
வலது இடது அபானம் – தனமுண்டு
வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம்,
வலது இடது முழங்ககால்கள் – சுபம்
வலது இடது கனுக்கால்கள் – சுபம்,
வலது இடது பாதங்கள் – பிரயாணம்,
வலது பாதம் – ரோகம்,
இடது பாதம் – துக்கம்,
வலது பாத விரல்கள் – ராஜபயம்
இடது பாதவிரல்கள் – நோய்,
வலது இடது கால விரல் நகங்கள் – தனநாசம்,
தேகத்தில் ஓடல் – தீர்க்காயுசு

குறிப்பு: (காஞ்சிபுரம்) ஸ்தலத்தில் உள்ள வெள்ளி பல்லி (அல்லது)பொன் பள்ளியை கைகளால் தொடு நமஸ்கரிக்க (பல்லி விழுதல்) பரிகாரம்.

ஜலகண்டேசுவரர் கோவிலில் , கோட்டை, வேலூர் - 632 001, வேலூர் மாவட்டம். அம்மன் சன்னதி எதிரே  உள்பிரகாரத்தில் தங்க பல்ல,வெள்ளி பல்லி, ராகு, கேது வழிபாடு இடம்உள்ளது. இதனை தொட்டு வணங்கினா திருமண தடை நீங்கும் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் நாகதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த இடம் திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கட்டணத்தில் தங்க பல்லி, வெள்ளி பல்லியை வழிபடலாம்.

பல்லியைக் கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் என்ன? காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது. 


பல்லியை மினி ஜோசியர் என்று கூறலாம். மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்தஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் மேற்கூறிய வழிபாடுகளை மேற்கொள்வது பலன் தரும்.


தோஷம் நீக்கும் பல்லி: அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி – 630 215 சிவகங்கை மாவட்டம். அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது

2 comments: